’வாரிசு’ திரைப்படத்திற்கு நடிகர் விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் அடுத்த படமான ’கோட்’ திரைப்படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்கியதாகவும், தற்போது ’தளபதி 69’ திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ’ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் விஜய் தரப்பிடம் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தபோது 200 கோடி என்று சம்பளம் கூறப்பட்டதாகவும் அதற்கு ஒரு வார்த்தை கூட மறுப்பு தெரிவிக்காமல் உடனே இந்நிறுவனம் ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.
ஏனெனில் விஜய் படம் பூஜை போட்ட உடனே சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்டு விடும் என்றும் அதிலேயே 150 முதல் 200 கோடி கிடைத்துவிடும் என்பதால் இந்நிறுவனம் எந்தவித மறுப்பையும் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடியை விஜய் சம்பளத்தை ஏற்றிக் கொண்டே சென்றாலும் எந்த தயாரிப்பாளரும் அவருக்கு சம்பளம் அதிகம் என்று மறுப்பு சொன்னதில்லை என்றும் அவர் கேட்கும் சம்பளத்தை தர தயாராக இருப்பதற்கு காரணம் அவருடைய மார்க்கெட் தான் என்றும் மிகப்பெரிய ஓபனிங் அவரது படத்துக்கு இருப்பதால் எப்படியும் லாபம் கிடைத்தவுடன் என்ற நம்பிக்கையில் தான் அவர் கேட்கும் சம்பளத்தை தருகிறார்கள் என்றும் தெரிகிறது.
ஒருவேளை அவர் அரசியலுக்கு வராமல் தொடர்ந்து சினிமாவில் இருந்தால் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக சம்பளத்தை வாங்கி விடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Listen News!