• Nov 10 2024

நான் டான்ஸ் ஆடுவதைப் பார்த்து விஜய் சேர் இதை தான் சொன்னாரு- லியோ படத்தில் நடித்தது குறித்து ஓபனாகப் பேசிய மடோனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபஸ்டியன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் செலின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மடோனா. அப்படத்தில் அவரின் கியூட்டான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இதன்பின்னர் தனுஷுக்கு ஜோடியாக பா.பாண்டி படத்தில் நடித்த மடோனா, அடுத்தடுத்து விஜய் சேதுபதி உடன் ஜுங்கா, கவண் போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் பேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தார். பின்னர் கோலிவுட்டுக்கு ரெஸ்ட் விட்டு, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார் மடோனா.


இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருந்து வந்த மடோனா செபாஸ்டியன், தளபதி விஜய்யின் லியோ படம் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய்யின் தங்கையாக எலீசா தாஸ் கேரக்டரில் நடித்துள்ளார் மடோனா.

இப்படத்தின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்த நிலையில் இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் லியோ படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதாவது, எனக்கு போன் பண்ணி விஜய்யுடன் ருவின்ஸாக நடிக்கனும் என்று சொல்லும் போது முதலில் நான் நம்பல அப்பிறம்  ரொம்ப சந்தேசமா இருந்திச்சு.


நான் டான்ஸ் ஆடுதைப் பார்த்த விஜய் சேர் டான்ஸ் ஆடும் ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னாரு, அது கேட்ட ரொம்ப சந்தோசமாக இருந்திச்சு.நான் செட்டுக்கு வந்ததே முதலில் டான்ஸ் ஆட தான் அங்க 1600க்கு அதிகமானவங்க இருந்தாங்க. எனக்கு வசந்திஅக்கா தான் டான்ஸ் சொல்லிக் கொடுத்தாங்க என்று கூறினார்.

மேலும் பைட் சீன் எல்லாம் டக்கு டக்குனு முடிஞ்சிடுச்சு, நான் இரண்டு வருசத்திற்கு முதல் பைட் பற்றி அடிப்படையான விஷயம் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சிருந்தேன். அது தான் இங்க பைட் பண்ண உதவிச்சு. எனக்கு இந்தப் படத்தில இப்பிடியொரு காரெக்டரில் நடிச்சது ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement