• Sep 21 2024

விஜய்சேதுபதி ஹீரோவாக வெற்றி பெற முடியாது: புளூசட்டை மாறன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை மட்டுமன்றி நடிகர் மற்றும் நடிகைகளை கிண்டல் கேலி செய்து வரும் விமர்சகர் தான் ப்ளூசட்டை மாறன். இவர் மீது அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி பற்றி பேசிய விடயம் ரசிகர்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது விஜய் சேதுபதியால் இனி ஹீரோவாக வெற்றி பெற முடியாது என்றும் வில்லன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே அவர் லாயக்கு என்றும் புளூசட்டை மாறன் வம்புக்கு இழுத்துள்ளார்.

சேதுபதி வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதே நேரத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த மாமனிதன் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிகவும் பின்தங்கியது.

எனினும் இதுகுறித்து புளூசட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகவும் மோசமான வசூலை பெற்றுள்ளது.

இதிலிருந்து விஜய் சேதுபதியை மக்கள் வில்லன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவரை ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றே தெரிகிறது என குறிப்பிட்டார். அவரது இந்த பதிவுக்கு செய்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Advertisement

Advertisement