தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாது வில்லனாகவும் நடித்து அசத்தி வருபவர் தான் விஜய்சேதுபதி. இவர் தற்பொழுது பாலிவூட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.அப்படி ஷாருக்கானுடன் மோத விஜய் சேதுபதிக்கு ரூ. 20 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.இவர்களின் திருமணத்தில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.அங்கு ஷாருக்கானை பார்த்ததும் அவரிடம் சென்று, ஜி உங்கள் படத்தில் வில்லனாக நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.
இதையடுத்து அட்லியை அழைத்து விஜய்யையே நம் படத்தில் வில்லனாக்கிவிடலாம் என்று கூறினாராம் ஷாருக்கான். அப்படித் தான் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தது.நயன்தாரா திருமண விழாவுக்கு சென்றதால் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் பட வாய்ப்பு, அதற்கு ரூ. 20 கோடி சம்பளம் கிடைத்திருக்கிறது.
ஜவான் பட ட்ரெய்லரில் ஹீரோ ஷாருக்கான் மட்டும் அல்ல வில்லன் விஜய் சேதுபதியும் தான் மிரட்டியிருக்கிறார். தான் கற்று வைத்திருக்கும் மொத்த வித்தையையும் ஜவான் படத்தில் காட்டியிருக்கிறார் அட்லி.ஜவான் படம் மூலம் அட்லியுடன் சேர்ந்து பாலிவுட் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!