• Nov 10 2024

96 பட பாணியில் தான் படித்த கல்லூரிக்குச் சென்ற விஜய் சேதுபதி- நெகிழ்ச்சியான தருணம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1996ஆம் ஆண்டு முதல் சிறு வேடங்களில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில்  கவனிக்க தக்க வகையில் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் . சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.


இந்நிலையில், துரைப்பாக்கத்தில் உள்ள தான் படித்த டிபி ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மானவர்கள் சந்திப்பு விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் ஆர்வத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, தனது கல்லூரி நாட்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.


இதனை தொடர்ந்து, தனது கல்லூரி நண்பர்கள் மற்றும் மாணவர்களுடன் அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனால் அங்கு வந்திருந்த அவரது நண்பர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். சந்திப்புக்கு பிறகு பேசிய அவருடைய நண்பர்கள்,"இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெறுவதால் ஆர்வத்துடன் கலந்துகொண்டோம். நண்பர்கள் அனைவருடன் விஜய் சேதுபதி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்றனர்.


Advertisement

Advertisement