தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் தான் வெற்றிமாறன். இவர் தற்பொழுது காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவர்களுடன் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.
அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இப்போது வரை 60 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம்.
இந்நிலையில் தற்போது கடைசி கட்ட ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் நடப்பதால் வன விலங்குகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸோடு படப்பிடிப்பை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அங்கு இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளில் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன். மீதமுள்ள படப்பிடிப்பில் சூரி மற்றும் பவானி ஸ்ரீ சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
- நடிகை ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?- பங்களாவின் மதிப்பே இவ்வளவு பெறுமதியா?
- எனது 23 வயதில் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்- நீண்ட பதிவினைப் போட்ட பிரபல சீரியல் நடிகை
- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்- கண்கலங்கிய நபர்
- “முடியாதுமூடிட்டு போடி” பிரபல சீரியல் நடிகையை திட்டிய காஜல்- ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வரும் ரசிகர்கள்
- ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய்- அடுத்த ஷுட்டிங் எங்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!