இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு `800' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தியுள்ளார். கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.
இருப்பினும் முத்தையா முரளிதரன் வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததால் பலத்த கண்டங்களுக்கு மத்தியில் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகினார். ஏனெனில் ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தமிழீழப் போராளிகளை விமர்சித்து வெளிப்படையாகப் பேசிவந்தவர் முத்தையா முரளிதரன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸாவின் மகனுமான நாமல் ராஜபக்ச 800படத்தின் டிரெய்லர் வீடியோவைப் பார்த்துவிட்டு இதில் விஜய் சேதுபதி நடிக்காதது கொஞ்சம் வருத்தமாக இருப்பதாக ட்விட்டர் பதிவின் மூலமாக கூறியுள்ளார். இருப்பினும் படக்குழு திட்டமிட்டபடி படத்தை எடுத்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
Excited to catch the #800movie trailer! It's regrettable that Vijay Sethupathi had to withdraw, but I'm pleased that the film on track as planned. A promising success story for young sportsmen in our region. Best wishes to the team!
#MuthiahMuralidaranhttps://t.co/5qrphTXfQT
அத்தோடு 800 படக்குழுவினர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நாமல் ராஜபக்ச.
Listen News!