• Nov 15 2024

ஷாருக்கான் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி- அட இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு முழுவதும் தனது மகன் போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டதால் பல இன்னல்களுக்குள்ளாகி வீட்டுக்குள்ளேயே முடந்கிக் கிடந்தார். மேலும் தனது மகனான ஆர்யன்கானை விடுதலை செய்வதற்காகவும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

அதன்படி ஆர்யன் கானும் குற்றமற்றவர் என்று நீதி மன்றம் நிரூபித்ததை அடுத்து ஷாருகான் மன உழைச்சலில் இருந்து விடுபட்டு பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகின்றார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் எனவும் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதனால் விஜய் சேதுபதி ஹிந்தியிலும் வில்லனாக மிரட்டப்போகிறார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அந்த படத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வந்திருக்கிறது. ஜவான் படத்திற்காக அட்லி கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாத நிலை இருப்பதால் விஜய் சேதுபதி இன்னும் ஒப்புக்கொள்ளவில்லையாம்.அதனால் விஜய் சேதுபதி என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement