கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த், சைக்கோ கிரைம் த்ரில்லர் படத்தில் கதையின் நாயகனாக தற்போது நடித்து வருகிறார்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராசன் என்பவர் வித்தியாசமான கதையம்சம் நிறைந்ததாக இயக்கி வருகிறார். மேலும் ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்புக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் படத்தின் டைட்டிலை தற்போது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தமிழ் புத்தாண்டு தினமான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் அப்படத்திற்கு ‘வைப்பர்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் தான் கதையின் நாயகன் என்பதால் வைப்பர் என திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் மணிமாறன் நடராசன் கூறி இருக்கின்றார்.
மேலும் இந்த திரைப்படத்தில் மிஸ் பெமினா பட்டம் வென்ற ரோஷினி பிரகாஷ் இப்படத்தில் நாயகியாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது இவர் இயக்குநர் பாலாவின் படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஜிப்ரான் இசை அமைப்பதோடு எஸ். ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
எனவே பிரபல தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து அகில இந்திய அளவிலான கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை தயாரித்து கொண்டு இருப்பதாக கிரினேடிவ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
Happy to share the title of @vidaarth_actor's upcoming crime-investigation thriller #Viper. Congrats team.@Greenativefilms @mn_manimaran #RoshiniPrakash #MohanRakeshBabu@GhibranOfficial #SRSathishKumar @Inagseditor @DineshSubbaray1 #ARMohan @proyuvraaj pic.twitter.com/3LT0Pq0swk
Listen News!