தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர் ஆவார்.
இவருடைய எதார்த்தமான நடிப்பினால் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார். அந்த வகையில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும், சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பேட்ட திரைப்படத்திலும், தளபதிக்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ள விஜய் சேதுபதி தொடர்ந்து கமலின் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.
இவர் விக்ரம் படத்தில் ஒரு சீனில் சட்டை இன்றி நடித்திருப்பார். இந்த சீன் செம்ம மாஸாக இருந்ததாக ரசிகர்கள் கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் இந்த சீனில் சட்டை அணியாமல் தொப்பையுடன் நடித்தபோது ரசிகர்கள் என்னை கிண்டல் அடித்து விடுவார்களோ என்று பயந்து நடித்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டும் என்று சொன்ன போது மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? என்ற பயம் எனக்கு இருந்தது. முதலில் நான் பனியன் அணிந்த படி நடிக்கட்டுமா என கேட்டேன். ஆனால் லோகேஷ் சட்டையின்றி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என சொல்லிவிட்டார்.
இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே நடிகர்களின் கடமை என்பதால் சற்று பயந்த படியே நடித்தேன்.படம் ரிலீஸ் ஆனதும் நிச்சயம் கிண்டலடிப்பார்கள் என நினைத்தேன் ஆனால் ரசிகர்கள் அதனை நல்ல மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். சந்தோஷமாக இருந்தது என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நடிகர் விஜயகாந்தின் காலில் இருந்து விரல்கள் நீக்கப்பட்டு விட்டதாம்- இது தான் காரணமா?
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதி உயர் சித்திகளைப் பெற்ற நடிகர் சூர்யாவின் மகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!