• Sep 20 2024

தன்னுடைய கேரக்டரில் நடித்த நடிகருக்காக பாட்டு பாடிய விஜய் சேதுபதி.. சூப்பர் தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தன்னுடைய கேரக்டரில் நடித்த இளம் நடிகரின் படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்தமாஸ்டர்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பவானி என்ற கேரக்டரில் நடித்திருந்த நிலையில் சிறு வயது பவானி கேரக்டரில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் மகேந்திரன் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில்கராஎன்ற படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கராபடத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்காக விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் குமாராக இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள நிலையில் சுமார் மூஞ்சி குமாரு, காதல் குமாருக்காக பாட்டு பாடி உள்ளார் என படக்குழுவினர் இந்த பாடலுக்கு விளம்பரம் செய்துள்ளனர்.

ஏற்கனவே ஒரு சில படங்களில் விஜய் சேதுபதி பாடல்களை பாடியுள்ளார் என்பதும் சில நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்மாஸ்டர்படத்தில் தனது சிறு வயது கேரக்டரில் நடித்த மகேந்திரனுக்காக ஒரு பாடலை பாடியுள்ள நிலையில் மகேந்திரன் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கராதிரைப்படத்தை அவதார் என்பவர் இயக்கியுள்ள நிலையில் அச்சு ராஜாமணி என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement