• Sep 21 2024

பிசாசு 2 படத்திற்காக டப்பிங் பேசிய விஜய் சேதுபதி-எப்போது ரிலீஸ் ஆகின்றது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் முடிவடைந்தது. சமீபத்தில் அதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள வேடம் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என சொல்லப்படுகிறது.தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் பிசாசு 2 படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசி முடித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement