இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இப் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என கூறப்படுகின்றது.இப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.இன்னும் இரு வாரங்களில் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது படத்தின் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டு வருவதாகவும் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டைக்கு கோரியோகிராப் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளது என கூறப்படுகின்றது.ஜெயமோகன் எழுதிய விடுதலை என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் சூரி காவலராகவும் நடிக்கின்றார். தமிழ் மற்றும் மற்ற மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.இந்த வருடத்தின் இறுதியில் விடுதலை தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறசெய்திகள்:
- நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நமிதா
- நயன்தாராவிற்கு பதிவு திருமணம் முடிஞ்சுருச்சா? தீயாய் பரவும் தகவல்!
- தளபதி 66 படத்தில் விஜய் லுக் எப்பிடி இருக்கிறது தெரியுமா- இணையத்தில் கசிந்த புகைப்படம்..!
- சிம்புவின் பத்து தல படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகர்…!
- தனுஷ் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த நாள்…நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!