• Sep 20 2024

பான் இந்தியா திரைப்படங்களை பற்றி பேசிய விஜய் சேதுபதி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வரும் நடிகர் விஜய் சேதுபதி.

இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றது .

இத் திரைப்படம் ரிலீஸ் ஆகி நான்கே நாட்களில் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் பான் இந்தியா திரைப்படங்கள் குறித்து விஜய் சேதுபதி பேசியிருப்பது தற்போது இணைய தளங்களில் வைரலாகின்றது .


நாம் முதலில் பான் இந்தியா படங்கள் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம் குறிப்பிடப்படும் ஒரு மாநிலத்தில் வெளியாகும் படங்கள் பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெவ்வேறு மாநிலங்களில் அவர்களின் மொழியில் உருவாகி வெளியாகுவதே பான் இந்தியா திரைப்படம்.

இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாயகன் விஜய் சேதுபதி, பான் இந்தியா படம் குறித்து கலகலப்பான பேட்டி அளித்துள்ளார். அதாவது டப்பிங் செய்யப்பட்ட அனைத்து படங்களையும் மக்கள் பார்க்கிறார்கள். அப்படியென்றால் அனைத்து படங்களையும் பான் இந்தியா படங்கள் என்று கூறலாம் என கூறியுள்ளார். அது மட்டும் இன்றி படம் நன்றாக இருந்தால் அனைவருமே பார்ப்பார்கள் .


அது பான் இந்தியா மட்டுமல்ல பான் வேர்ல்ட் என்றே கூறலாம்' என்று கலகலப்பான பதில் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.இந்த கலகலப்பான பதில் இணையதளங்களின் மிகவும் வைரலாக பேசப்படுகின்றன.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement