• Sep 20 2024

அதர்வாவுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி பட நடிகை-வெளியான புதிய போஸ்டர்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா தயாித்து நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "ட்ரிகர்". அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த போஸ்டரில் அதர்வாவின் 'ஆங்கிரி யங் மேன்' தோற்றம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட செகண்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Romeo Pictures ராகுல் படத்தை தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2022 இல் வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அருண்பாண்டியன், முனிஷ் காந்த், கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன் போன்ற பிரபல நடிகர்களுடன் மேலும் சில முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement