• Sep 21 2024

மீண்டும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி! இந்த முறை இந்த ஹீரோ தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்

இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார்.

விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர் படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அடுத்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் அடுத்து படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அந்த படத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லனுக்கும் ரோல் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement