கஜினி அலிகான், மஹபீர் அலிகான், விஜய்சேதுபதி, இயக்குனர் ஜெயக்குமார்.ஜே, தில்ரூபா அலிகான், ஜஹாங்கிர் அலிகான் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் தற்போது 'சரக்கு' என்ற படம் உருவாகி வருகின்றது.
அதாவது இப்படம் குறித்து மன்சூர் அலிகான் கூறுகையில் "தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சி படைப்பு "சரக்கு" என்றார். இப்படத்தில் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார்.
அதுமட்டுமல்லாது சிறப்பு தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் என்பவரும் நடிக்கிறார். அத்தோடு இவர்களுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
மேலும் ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. இதனை விஜய்சேதுபதி வெளியிட்டிருக்கின்றார்.
Listen News!