தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இணைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கோலிவுட் முதல் பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு மவுசு மிக்க இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க, சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறது. லியோ படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.
லியோ படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை அப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக காஷ்மீரில் 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தியுள்ள படக்குழு, எஞ்சியுள்ள 50 சதவீத படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். லியோ படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், படத்தின் பணிகள் நான் ஸ்டாப் ஆக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இப்படத்தில் நடிகராக கமிட் ஆகவில்லையாம். அவரை பின்னணி குரல் கொடுப்பதற்காக லோகேஷ் அணுகி உள்ளாராம். இதற்காக விஜய் சேதுபதியிடம் மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்டு உள்ளாராம் லோகேஷ். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இதற்கு ஓகே சொல்லிவிடுவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!