மதுரையில் நடந்து வரும் முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பிறகு, ரோகிணி திரையரங்கில், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படம்பார்க்க அனுமதிக்க மறுக்கப்பட்டது குறித்து, நடிகர் விஜய் சேதுபதி ஆவேசமாக தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை, உலகநாயகன் கமல் ஹாசன் திறந்து வைத்தார்.
அத்தோடு இந்த கண்காட்சியில், திமுக தலைவர் மு க ஸ்டாலினின் இளம் வயது புகைப்படங்கள் மற்றும் அவர் அரசியல் கட்சிக்காக பட்ட இன்னல்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் சிற்பங்கள் போன்ற இடம்பெற்றிருந்தது.
சென்னையில் நடைபெற்ற கண்காட்சியை, பள்ளி குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் கட்சி தொண்டர்கள், பிரபலங்கள், என அனைவரும் கண்டு களித்த நிலையில், இதே கண்காட்சியை மதுரையில் நடத்தவும் திட்டமிடப்பட்டது.
எனினும் இதற்கான வேலைகளில் அமைச்சர் மூர்த்தி இறங்கிய நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது போலவே, மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் நேற்று நடிகர் விஜய் சேதுபதி இந்த கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, புகைப்பட கண்காட்சி குறித்து மிகவும் பெருமையாக பேசினார்.
அத்தோடு செய்தியாளர்கள் ரோகினி திரையரங்கில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தை படம் பார்க்க அனுமதிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு... "எங்கேயும் எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டது. அதில் வேற்றுமையை யார் எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது. ரோகினி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
Listen News!