திரைப்பட தயாரிப்பாளர் ஆகிய சேவியர் பிரிட்டோ அவர்கள் 'எஸ்தல் எண்டர்டெய்னர்' நிறுவனத்தின் சார்பில் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் 'அழகிய கண்ணே'. இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் R.விஜயகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளதோடு, இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு சாலமன் உட்படப் பலரும் நடித்துள்ளனர். மேலும் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.
அத்தோடு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இத்திரைப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் வருகிற ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதனை முன்னிட்டு அப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.
Listen News!