• Sep 20 2024

விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்பட ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் எனப் பல்வேறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றார். அத்தோடு தமிழில் பிஸியாக நடித்து வந்தாலும் தெலுங்கு மற்றும்  பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களை விஜய் சேதுபதி கைவசம் வைத்துள்ளார். 


அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய்சேதுபதி நடிப்பில் மாநகரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆன மும்பைகார் திரைப்படம் வெளியானது. இதனை அடுத்து மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார்.

இப்படத்தில்  விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோருடன் இணைந்து ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 15ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது.


இந்நிலையில் தற்போது பட ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது இந்தத் திரைப்படம் டிசம்பர் 8-ஆம் தேதியன்று வெளியாவதாக புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement