தமிழ் சினிமாவில் டாப் டென் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளிலும் பல வேடங்களில் நடித்து கொடி கட்டிப் பறந்து வருகின்றார். இவர் தமிழ் சினிமாவில் 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற படத்தின் மூலமாகவே ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவரின் நடிப்பில் சமீபத்தில் 'மாமனிதன்' என்ற படம் வெளியாகி இருக்கின்றது. இப்படமானது நல்ல வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து தற்போது 'மேரி கிரிஸ்மஸ்' எனும் ஹிந்திப் படத்திலும், '19' எனும் மலையாள படத்திலும், 'விடுதலை', 'காந்தி டாக்ஸ்', 'மும்பை கார்' எனும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் தற்போது சூரி கதாநாயகனாக அறிமுகமாகும் 'விடுதலை' என்ற படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. மலைவாழ் மக்களுக்கு நேரும் இன்னல்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி இதில் போராளியாக நடிக்கின்றார். இந்த நிலையில் 'விடுதலை' படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது. இதில் மலைவாழ் சிறுவனாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடிப்பதாகக் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- சைக்கிளிங் மீது காதல் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…வெளியான புகைப்படம்…!
- களை கட்டப் போகும் குக் வித் கோமாளி பினாலே…போட்டியாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் சங்கமிக்கும் தருணம்… வெளியாகிய புரோமோ..!
- கறுப்பு உடையில் கவர்ச்சிப் போட்டோக்களை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்…மாளவிகா மோகனன் செய்த அந்தக் கமெண்ட்…என்ன தெரியுமா..?
- சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் சமந்தா…காரணம் இதுதானா..?
- கங்கனா ரனாவத்திற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் தமன்னா கூறிய அந்த வார்த்தை…என்ன தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!