• Sep 20 2024

விஜய் சேதுபதியை அடிச்சுத் தூக்கிய விஷ்ணு விஷால்... வெளியானது மூன்றாம் நாள் வசூல் நிலவரம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் டிசம்பர் முதல் வாரத்தில் விஷ்ணு விஷால் நடித்த 'கட்டா குஸ்தி' மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'டிஎஸ்பி' ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகின. 


இதில் கட்டா குஸ்தி என்ற படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். அதேபோன்று டிஎஸ்பி திரைப்படத்தை ஹிட் படங்களில் ஒன்றான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கி இருந்தார்.

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இப்படமானது குஸ்தி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் பிரமாண்டமான முறையில் இசையமைத்து இருந்தார். 


அத்தோடு விஷ்ணு விஷாலும் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

மறுபுறம் டிஎஸ்பி படத்தை எடுத்துக் கொண்டால் அதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையான அனுகீர்த்தி என்பவர் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து புகழ், சிவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் சார்பாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இந்த இரு படங்களின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 


ல் கட்டா குஸ்தி திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருவதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவித்துள்ளது. அதாவது இப்படம் மூன்று நாட்களில் ரூ.13 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7 கோடி வசூலை பெற்றிருக்கின்றதாம்.

அதேபோன்று இப்படத்திற்கு போட்டியாக ரிலீசான டிஎஸ்பி திரைப்படம் வெளியாகிய முதல் நாளே சுமாரான விமர்சனங்களை பெற்றதால் குறைந்த  வசூலை பெற்றிருக்கின்றது. அதாவது இப்படம் மூன்று நாட்களில் ரூ.5 கோடி வசூலை கூட எட்டவில்லை என தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement