இந்தியா சினிமாத்துறையின் ஆரம்பத்தில் இன்று நாம் காணும் படங்கள் யாவும் மௌனப்படங்களாவே அமைந்தன .காலங்கள் கடந்து செல்லவே படங்கள் புத்துயிர் பெற்று பேசும் படங்களாக வளர்ச்சியடைந்தன .
இந்நிலையில் கடந்த 35 ஆண்டுகளின் பிற்பாடு மௌனப்படம் என்ற டைட்டில் தற்போது பெரும் வைரலாகிவருகின்றது .
மக்கள் செல்வன் என்று பலராலும் அறியப்படட தமிழ் நாட்டு நடிகர் தான் நமது விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று . பீட்ஸா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம், நானும் ரவுடி தான் என்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுக்கொண்டார் . தற்போது தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் .
அந்தவகையில் தற்போது வைரலாகி வரும் மௌனப்படம் என்ற டைட்டிலில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் நம்ம விஜய் சேதுபதி . சினிமா வரலாற்றின்ஆரம்பத்தை மையப்படுத்தியதாக உலகநாயகன் கமல் காசன் நடிப்பில் 1987 இல் மௌனப்படம் என்ற வகைக்குள் பேசும்படம் என்று என உருவாகியது .
மௌனப்படம் என்றால் என்ன என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . அதாவது மௌனப்படங்களில் பின்னணி இசைகள் அனைத்தும் கேட்கும் , நடிப்பவரின் சத்தம் மட்டும் கேட்காது , அதுவே இப்படத்தின் சுவாரஷ்யம்
அந்தவகையில் 35 வருடங்களின் பின்பு மௌனப்படங்களை அடிப்படையாகக்கொண்டு விஜய் சேதுபதி நடிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு காந்தி டோக்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர் , இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கவுள்ளார் .
இந்தப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம் , கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது . இப்படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் விஜய் சேதுபதியின் மௌனப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கின்றனர்
Listen News!