• Nov 19 2024

சிகரெட் பிடிக்கும் படங்களில் இனிமேல் விஜய் நடிக்க கூடாது- எச்சரிக்கை விடுத்த அரசியல் பிரபலம்- எல்லாம் காற்றில பறக்க விட்டாச்சா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய்  லோகேஷ் கனகாஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்து வரும் இப்படத்தின் பெஸ்ட் சிங்கிள் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி, வெளியாகும் என்று விஜய் அதிகாரப்பூர்வமாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இந்த தகவலை மிகுந்த உற்சாகத்தோடு சமூக வலைத்தளத்தில் அதிகம் ஷேர் செய்தும், ட்ரெண்ட்டாக்கியும் வந்தனர்.இந்நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவிக்கும் விதமாக, விஜய் கையில் துப்பாக்கியையும், வாயில் சிகரெட்டையும் வைத்திருப்பது போல், வெளியிடப்பட்ட  போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ட்வீட் ஒன்றைபோட்டுள்ளார். 


இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!  "லியோ திரைப்படத்தின்  முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி  இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை  குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். 

அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு.  சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே இரண்டுமுறை உறுதியளித்ததை விஜய் காற்றில் பறக்கவிட்டு விட்டு... இது போன்ற காட்சிகளில் நடிக்கிறார் என்பதை சுட்டி காட்டும் விதமாகவும், தளபதி விஜய் இது போன்ற காட்சிகளில் நடிப்பதை நிறுத்தவேண்டும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கிறாரா? என ரசிகர்களும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனினும் அன்புமணியின் இந்த பதிவுக்கு பலர் தங்களின் ஆதரவுகளை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement