விஜய் நேற்று அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார்.
அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மாணவி ஒருவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகி நான் 597 மதிப்பெண் எடுத்திருக்கிறேன். என்னை ஏன் ஊக்கத்தொகைக்கு வழங்க தேர்வு செய்ய வில்லை? என்னை ஏன் நிகழ்ச்சிக்கு அழைக்க வில்லை என்று கூறி கண்ணீர் வடித்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பனையூரில் இருக்கும் அலுவலகத்திற்கு வந்து பாருங்கள் என்று கூறினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் இந்த விவகாரம் விஜயின் மேனஜரான ஜெகதீஸிடம் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. குழு மாணவியை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருக்கிறதாம். என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!