• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய அதே வசனத்தை பேசிய விஜய்- ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். 

இதனிடையே தொகுதிவாரியாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை இன்றைய தினம் நேரில் சந்தித்தார்.இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகிவந்த நிலையில், மாணவர்களை விஜய் சந்தித்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடபெற்றது. 


சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய்யுடன் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேலும், சுமார் 1,500 மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் விஜய் மேடையேறி மாணவர்கள் முன்னிலையில் உரையாடினார். ரொம்பவே சிம்பிளான காஸ்ட்யூமில் க்யூட்டாக பேச்சைத் தொடங்கிய விஜய், கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்தார்.


இந்த நிலையில் இவர் பேசும் போது எதை இழந்தாலும் எமது காரெக்டரை இழக்கக் கூடாது என்று சொல்லி இருந்தார். இதனை ரஜினி ஏற்கனவே ரஜினி ஒரு பேட்டியில் பேசியதாகவும் அதைக் கொப்பி பண்ணித் தான் விஜய் பேசியுள்ளார் என அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement