• Sep 20 2024

மீண்டும் அஜித்துடன் நிற்கும் விஜய்- யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ- அடடே நடிகர் சிவாவும் நிற்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு முக்கிய துருவங்கள் என அழைக்கப்படும் முக்கிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதோடு இவர்களுடைய படங்கள் வசூலிலும் அள்ளிக் குவித்து விடும்.

இது தவிர இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வை என்னும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். இதனை அடுத்து மீண்டும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இருப்பினும் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தான் கூற வேண்டும்.

கெரியரில் ரொம்ப பிஸியாக இருக்கும் இவர்கள் இருவரும் தமது புதிய படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் வாரிசு என்னும் படத்திலும் அஜித் ஏ.கே 61 என்னும் படத்திலும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படங்கள் குறித்தும் அப்டேட்டுக்கள் அடிக்கஎ வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நிற்கும் பழைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவது உண்டு. அதே போல தற்பொழுதும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சிவாவும் நிற்கின்றார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை பார்த்ததே இல்லையே எனக் கூறி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement