தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் தான் வாரிசு. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் 350 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த ரஜினி, "இதுகுறித்து தனக்கு எந்த பயமும் கிடையாது... இந்த பட்டத்தை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது" என்பது போல பஞ்ச் வைத்தார். மேலும், 'காகம் - பருந்து' என அவர் சொன்ன குட்டி ஸ்டோரி இன்னும் வைரலானது.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதாக ரஜினி பேசியது கோலிவுட்டையை அதிர வைத்தது. இதனையடுத்து இந்த விவகராம் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.ஒரேயொரு சூப்பர் ஸ்டார் என்ற காலம் எப்போதோ முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு அதிரடியாக கூறியிருந்தார்.
இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மியும் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து அதிரடியாக பேசியுள்ளார்.அதாவது, ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தற்போது அவரது படங்களின் பிஸினஸ், ஓபனிங், வசூல் எதுவும் சொல்லும்படி இல்லை. ஆனால், விஜய்யின் படங்கள் தான் இன்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைக்கின்றன
மேலும், லியோ ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் 400 கோடி, ரஜினி 80 கோடி சம்பளம் என்றால், விஜய்யோ 200 கோடி சம்பளத்துக்கு சென்றுவிட்டார். இப்படி எல்லாவிதத்திலும் விஜய் தான் இப்போது வசூல் சக்கரவர்த்தி என்றுள்ளார். அதனால், எப்படிப் பார்த்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான அனைத்து பொருத்தங்களும் விஜய்யிடம் உள்ளன.
ரஜினியின் ஜெயிலர் படத்தை மட்டும் வைத்துக்கொண்டு இங்கே எதுவும் கிடையாது. வணீக ரீதியாக விஜய் சூப்பர் ஸ்டார் எனக் கூறலாம் என அதிரடியாக பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!