• Sep 20 2024

நடிப்பதை நிறுத்தி விட்டு இயக்குநராக அவதாரம் எடுக்க முடிவு செய்த விஜய்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய ஒளிப்பதிவாளர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடிதது வருகின்றார். இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குவதோடு படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்கள் யாரென்பது குறித்தும் தகவல் வெளியாகியவாறு இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான விஜய் மில்டன் நடிகர் விஜய் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய்யின் ஆரம்பகால படங்களில் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார், அப்போது விஜய்யுடன் நெருங்கிய நண்பராக இருந்த விஜய் மில்டன். தன்னிடம் விஜய் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை, 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு இயக்குநராக போகிறேன் என விஜய் சொன்னார்.

ஆனால் தற்போது விஜய் அதை பற்றி யோசித்து கூட பார்க்க முடியாத அளவு பெரிய நடிகராகிவிட்டார் என விஜய் மில்டன் பெருமையாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement