• Sep 21 2024

10 மற்றும் +2 பொதுத்தேர்வில் முதன்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கவுள்ள விஜய்- வழங்கப்படவுள்ள உணவு என்னென்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்து வரும் இப்படத்தின் பெஸ்ட் சிங்கிள் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி, வெளியாகும் என்று விஜய் அதிகாரப்பூர்வமாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.


இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இந்த தகவலை மிகுந்த உச்சாகத்தோடு சமூக வலைத்தளத்தில் அதிகம் ஷேர் செய்தும், ட்ரெண்ட்டாக்கியும் வந்தனர். விஜய் கையில் துப்பாக்கியையும், வாயில் சிகரெட்டையும் வைத்திருப்பது போல், வெளியிடப்பட்ட  போஸ்டருக்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்தும் வருகின்றனர்.


இது ஒரு புறம் இருக்க விஜய் இன்றைய தினம் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பொதுவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நீலாங்கரை  rk convention மையத்தில் சந்தித்து ஊக்கத் தொகை வழங்கவுள்ளார்.


எனவே அவர்களுக்கு வழங்கவுள்ள உணவு குறித்தும் தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாங்காய் ஊருகாய், இஞ்சி புளி துவையல் புதினா,ஆனியன் வெள்ளேரி தயிர்பச்சடி,உருளைப் பட்டாணி வருவல்,கதம்ப பருப்பு பொரியல், சவ்வச் கூட்டு, காளிஃபிளவர் பகோமா, வெஜ்புலவு,காரக்குழம்பு,தக்காளி ரசம்,ஆனியன் வடை,மாங்காய் முருங்கக்காய் கதம்ப சாம்பார்,அப்பளம்,மோர் போன்ற உணவுகள் சுடச்சுட தயாராகி வருகின்றதாம் என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement