விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் ஆனந்தி. சிவகார்த்திகேயன் போட்டியாளராக பங்குபெற்ற பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் இவர், சிவகார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று அந்த சமயத்தில் பலர் வைரலாக்கினர்.
எனினும் அதன் பின்னர் தொலைக்காட்சியில் சீரியல் தொடர்களில் நடிக்கத்துவங்கினார். தமிழில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த இவர் இதுவரை தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற பல படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில் கோவையை சேர்ந்த அவர் திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறார்.
சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பலரும் பல விதமான கேள்விகள் கேட்டனர். ஆனால் ஒரு நபர் மிகவும் மோசமாக 'உங்களுக்கு முத்தம் கொடுக்க ஆசை' என குறிப்பிட்டு இருந்தார்.
அதற்கு பதில் கொடுத்த ஆனந்தி "நானும் தளபதி விஜய் போஸ்டருக்கு பல முறை முத்தம் கொடுத்திருக்கிறேன். நீயும் follow பண்ணு" என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனந்தி மிக தீவிர விஜய் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- இந்த கறுப்பு நிற உடை மட்டும் இத்தனை இலட்சமா-பிரியங்கா சோப்ராவை வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!
- கோபி பிரச்சனைக்கு அம்மா சொன்ன தீர்வு..குழப்பத்தில் ராதிகா – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- இலங்கைத் தமிழரை திருமணம் செய்த ரம்பாவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
- முதல் முறையாக பாலிவுட் நடிகருடன் இணைந்து சமந்தா வெளியிட்ட புகைப்படம்-இது தான் விசயமா..?
- சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேர்ந்த கயல் சீரியல் சைத்ரா ரெட்டி- அவரே பதிவிட்ட வீடியோ..!
- திடீரென தனது சம்பளத்தை அதிகரித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!