• Sep 20 2024

அதிரடியாக 4சீரியல்களை நிறுத்தப் போகும் விஜய் டிவி... அதிர்ச்சியில் ஒட்டு மொத்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அதிகளவான ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று தான் விஜய். இதில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ஏராளம் ரசிகர்கள் உண்டு. 

அதிலும் குறிப்பாக சீரியல்களுக்கு எல்லையில்லாத ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்தவகையில் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்கள் பலவும் இதில் ஒளிபரப்பாகிறது. இதனாலோ என்னவோ ஏராளமான ரசிகர்கள் உருவாகிய வண்ணம் உள்ளனர். 


இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 4 சீரியல்கள் நிறுத்தப்பட இருக்கிறதாம். அந்தவகையில் வரும் ஜுன் மாதத்திற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 என 4 தொடர்களை நிறுத்துகிறார்கள் எனக் கூறப்படுகின்றது.


இதனையறிந்த ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளார்கள். இருப்பினும் சில சமயங்களில் இந்தத் தகவல் April Foolஆக கூட இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement