சின்னத்திரை சேனல்கள் டிஆர்பியை ஏற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில்தான் தற்போது நிறைய சேனல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இப்படி அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் இசைப்போட்டி. 20 வருடங்களுக்கு முன்பு சப்தஸ்வரங்கள், பாட்டுக்கு பாட்டு என சத்தமே இல்லாமல் சென்று கொண்டிருந்த இந்த இசைப்போட்டி, விஜய் டிவி களத்தில் இறங்கிய பொழுது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல வருடங்களாக குரல் பயிற்சியாளராக இருந்த அனந்த் வைத்தியநாதன் இது பற்றி சமீபத்திய பேட்டியில் ரொம்பவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அவர் பேசியதில் வெறும் பாட்டு போட்டி, திறமை என பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி ஏறாது. எனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து நிகழ்ச்சியின் இயக்குநர்கள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு அழுத்தம் தரப்படுவதால் அவர்கள் கண்டன்டுகளுக்காக நிறைய விஷயங்களை செய்கிறார்கள். மேலும் ரசிகர்களால் கவனத்தை ஈர்க்கும் போட்டியாளர்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் இருந்தால் தான் மக்களும் விரும்பி பார்க்கிறார்கள். அதனால் தான் சேனல் இதை செய்கிறது என்று உண்மையை சொல்லி இருக்கிறார்.
ஒரு இசை பயிற்சியாளராக இருக்கும் என்னிடம் பாட்டு கற்றுக்கொள்ள வர வேண்டும் என்று நினைப்பவர்களை விட, இவரது பள்ளியில் சேர்ந்தால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று நினைத்து வருபவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
இதனாலேயே இசைப் பள்ளியை எடுத்து நடத்த எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என்னுடைய கேரியர் இப்படி சந்தேகத்திற்கு உள்ளாகி விட்டது என்று அனந்த் வைத்தியநாதன் புலம்பி இருக்கிறார்.
Listen News!