விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு குக்வித் கோமானி காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற காமெடி நிகழ்ச்சிகளை அடுத்து தற்பொழுது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ரியாலிட்ரி ஷோ தான் ராஜு வீட்ல பார்ட்ரி.
இந்த நிகழ்ச்சியினை பிக்பாஸ் சீசன் 5 இன் டைட்டில் வின்னர் ராஜு தொகுத்து வழங்கி வருவதோடு ராமர், மதுரை முத்து ,ப்ரியங்கா ஆகியோர் துணையாளர்களாக நிகழ்ச்சியின் சுவாரஸியத்தை அதிகரிக்க வருவதும் உண்டு.
அந்த வகையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சிக்கு மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது ராமர் நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் போல பேசி ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றார்.
அதில் ராஜு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனதுக்கு பிறகு எதற்கு கமல்சேர் நானே பிக்பாஸை தொகுத்து வழங்கி வருகிறேன் என்று கூறினார். அதனால தான் புரோமோவில் அவரை சேர்த்தாங்க என்று காமெடியாகப் பேசினார். இதனை கேட்ட மன்சூர் அலிகான் விழுந்து விழுந்து சிரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!