விஜய் தொலைக்காட்சி என்றாலே சில முகங்கம் நமக்கு நியாபகம் வரும். அதில் ஒருவர் தான் ராமர், இவர் காமெடிக்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் சிலர் உள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.
மேலும் எந்த புது நிகழ்ச்சி ஆரம்பமானாலும் அதில் அவர் வந்துவிடுகிறார், அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்ற அளவிற்கு உள்ளது.இவர் இப்போது படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார், அடுத்தடுத்து நிறைய படங்களும் நடிக்க இருக்கிறார்.
அவர் பெண் வேஷத்தில் 'என்னமா இப்படி பண்றீங்களேமா' என செய்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஸ்பூப் மிகப்பெரிய அளவில் ஹிட். தற்போது டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களிலும் தோன்றி வருகிறார் ராமர்.
ராமர் மதுரை அருகில் மேலூர் பகுதியை சேர்ந்தவர். மேலும் அவரை காமெடியனாக மட்டுமே நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு அரசு அதிகாரி என்கிற தகவல் ரசிகர்கள் பலருக்கும் தெரியாதது. அவர் VAO வாக பணியாற்றி வருகிறாராம்.
மேலும் எம்பி சு.வெங்கடேசன் என்பவர் ட்விட்டரில் ராமர் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு "கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன்" என தெரிவித்து இருக்கிறார்.
அந்த பதிவு இதோ
இன்று கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 30, 2022
மகிழ்ச்சி .@vijaytelevision
#VijayTv #Ramar #madurai #KPY pic.twitter.com/cFmA461Ds7
பிற செய்திகள்:
- ‘மாமா, மாப்ஸ் என்று உறவு சொல்லித்தான் பேசுவோம் மற்றபடி எந்த சலுகையும் இல்லை’-ஹரி பற்றி கூறிய அருண் விஜய்
- விஜே அர்ச்சனாவா இது-முடியை வெட்டி ஆளே மாறிப்போய்விட்டாரே..தீயாய் பரவி வரும் புகைப்படம்..!
- 50 நாட்களில் பீஸ்டின் மொத்த வசூல்-வெளியானது முழு விபரம்..!
- ‘இது வழக்கமான கதை தானே வேற கதை கொண்டு வாருங்கள்’- லோகேஷின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்
- பாடகர் கே.கே யின் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த பிரதமர் மோடி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!