• Nov 15 2024

விஜய் டிவி சீரியல் ஹீரோ -ஹீரோயினுக்கு போன் பண்ணி பேசிய நடிகை அனுஷ்கா- ஏன் தெரியுமா...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அனுஷ்கா விஜய் டிவி சீரியலுக்கு ரசிகையாக மாறி, போன் செய்து வாழ்த்தியதாக அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள வீடியோ தற்போது தீயாய் பரவி வருகின்றது.

 தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து தற்போது வரை டாப் நடிகைகள் லிஸ்டில் உள்ளவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. ஒருவழியாக 40 வயதை எட்டி விட்ட இவருக்கு இன்னும் திருமணம் நடைபெற வில்லை என்பது தான் இவரது குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும் உள்ள மிகப்பெரிய கவலையாக உள்ளது. திருமணம் செய்து கொள்வதற்காக சில பல பூஜைகள் செய்த பின்னரும்  தனக்கு ஏற்ற போல், மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.


எனினும் தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இவர் நடித்து வருகிறார். தமிழில், இவர் கைவசம் எதுவும் படங்கள் இல்லை என்றாலும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள மார்க்கெட் குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.



இந்நிலையில், அனுஷ்கா விஜய் டிவி சீரியல் ஒன்றிற்கு மிகப்பெரிய ரசிகை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, இந்த சீரியலின் நாயகன் மற்றும் நாயகி இருவரும்... விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில்  அதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலின் ஹீரோ வினோத் பாபு கூறுகையில்...

நான் சொல்லுவது அம்மா சத்தியமா உண்மை. பொய் கிடையாது காரணம் என் பொண்டாட்டியே நான் சொன்னபோது நம்ப மறுத்துவிட்டாள். ஒரு 20 நாட்களுக்கு  முன் ஒரு கோல் வந்தது.. நான் பவித்ரா அனுஷ்கா ஷெட்டியின் பர்சனல் மேனஜர் பேசுகிறேன் என்று சொன்னாங்க. நானும் யாரோ பிராங்க் பன்றாங்க என்று நினைத்து கேள்வி எழுப்பியதற்கு, நான் பாகுபலி ஹீரோயின் அனுஷ்கா உங்களிடம் பேச வேண்டுமென்று ஆசைபட்டாங்க பேசுங்கள் என்று சொன்னாங்க. அப்போது உண்மையாவே அனுஷ்கா எங்கள் இருவருக்கும் பேர்ஸனலாக கால் போட்டு, தொடர்ந்து 15 எபிசோட் பார்த்ததாகவும், எங்க அம்மா உங்க பேன். நானும் உங்களுடைய பேன் என கூறியதாக தெரிவித்தார். இது என் அம்மா சத்தியமா உண்மை என சொல்லியுள்ளார்.



 இவரை தொடர்த்து பேசிய பவித்ரா... அவங்க ரொம்ப ஸ்வீட்... ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தாங்க. உங்கள் சீரியல் பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. நீங்க ரொம்ப ப்ரீடி... இப்படி எல்லாம் சொன்ன போது, தனக்கு பறப்பது போல் இருந்ததாக தெரிவித்தார்.மேலும்  இந்த மேடை அதற்க்கு நன்றி சொல்வதற்கு சரியானதாக இருக்கும். என இந்த ப்ரோமோ வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ



Advertisement

Advertisement