விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றால் அது நடந்துவிடுமென மஹாலக்ஷ்மியையும் ரவீந்தரையும் எச்சரித்துள்ளனர் ரசிகர்கள்.
புதுமண தம்பதிகளான மஹாலக்ஷ்மியும் ரவீந்தரும் விஜய் டிவியின் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். வந்தாள் மஹாலக்ஷ்மியே என்ற இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள நிலையில் இதற்கான ப்ரமோக்கள் வெளியாகி உள்ளது.
படு ரொமான்டிக்காக உள்ளது இந்த நிகழ்ச்சி. இதில் தனது காதல் மனைவிக்காக கவிதை மழை பொழிந்து வருகிறார் ரவீந்தர். அத்தோடு ரவீந்தரின் காதலை பார்த்து பூரித்துப் போகும் மஹாலக்ஷ்மி வெட்கத்தில் நெளிகிறார். மஹாலக்ஷ்மியும் ரவீந்தரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனினும் அதே நேரத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக ரவியையும் மஹாலக்ஷ்மியையும் எச்சரித்துள்ளனர் நெட்டிசன்கள். அதாவது விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றால் சீக்கிரம் பிரிந்துவிடுவார்கள் என்று கூறும் நெட்டிசன்கள், செண்டிமெண்ட்டாக அது சரியில்லை என ஜோடியாக பங்கேற்ற பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகின்றனர்.
விஜே சித்ராவையும் அவரது கணவர் ஹேமந்தையும் இப்படிதான் அழைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள். அத்தோடு கடைசியில் என்ன ஆனது? என்றும் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இன்னும் சிலர் இப்போது இந்த நிகழ்ச்சி அவசியம்தானா? எத்தனை பேர் முதல் திருமணமே நடக்காமல் வருத்தத்தில் உள்ளனர். இரண்டாவது திருமணத்திற்கு இப்படி விளம்பரமா என சாடி வருகின்றனர்.
Listen News!