தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் என்பன ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த ரியாலிட்ரி ஷோக்களிலோ சரி சீரியல்களிலோ சரி நடித்து வருபவர்கள் குறுகிய காலத்திலேயே தமக்கென ரசிகர்களையும் சேர்த்து விடுகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் இதனைத் தொடர்ந்து ப்ரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்ராட் மியூசிக் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் கலந்து கொண்டு தனது வசீகரக் குரலால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
இது தவிர பல திரைப்படங்களிலும் பாடி வருகின்றார். கோமாளி படத்தில் இவர் பாடிய ஒலியும் ஒளியும் பாடல் வேற லெவலில் ஹிட்டடித்தது. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் மிகவும் கிராண்டாக நடந்தது.
மேலும் இவருடைய மனைவி ஜெசிக்கு தற்பொழுது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!