தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இதுவரை சுமார் 65 படங்களில் நடித்து முடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 66 ஆவது படமாக வாரிசு படம் உருவாகி வருகின்றது. இப்படமானது வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போதே அப்படம் குறித்த அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த வண்ணம் இருக்கின்றன.
அந்தவகையில் சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' பாடல் வெளிவந்திருந்தது. தமன் இசையமைத்த இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி ஆகியோர் இணைந்து சூப்பராகப் பாடியுள்ளார்கள்.
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் அதேவேளை இந்தப் பாடல் வெளியான நேரம் முதல் சமூக வலைதளத்தில் எதிர்க்கணிய கருத்துக்களை முன்வைத்து நெட்டிசன்கள் மத்தியில் சற்று ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது.
அதாவது இப்பாடலில் இடம்பெற்றுள்ள 'உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே' என்ற வரிகள் தான், இந்த சர்ச்சைக்கு பிரதான காரணம்.
இந்த வரிகளின் உண்மையான அர்த்தம் தெரியாமலேயே பல சிறுவர்கள் இந்த வரிகளை பாடி வருவதாக நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் போர் கொடி உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாது விஜய் போன்ற பெரிய நடிகர்கள், தங்களுடைய படங்களில் இடம்பெறும் வார்த்தைகள் கூட எப்படி உள்ளது என்பதை முதலில் ஆராய்ந்து பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் முன் வைத்து வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாது அதை அதிகளவில் பகிர்ந்தும் வருகின்றனர்.
Listen News!