விஜய் மற்றும் வம்சியின் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'வாரிசு'. இத்திரைப்படமானது வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. முற்றலும் மாறுபட்ட கதையம்சத்தைக் கொண்டிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க, தமன் இசையமைக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க என புது கூட்டணியுடன் விஜய் இணைத்துள்ளார். அத்தோடு விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படமானது கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது. எனவே வாரிசு படத்தை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கின்றார் விஜய்.
இந்நிலையில் இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று எமோஷனல் நிறைந்த படமாக இருக்கும் என்பதால் வாரிசு அனைத்து விதமான தளபதி ரசிகர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு சித்ராவின் குரலில் அம்மா பாடல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் கடந்த வாரம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. அத்தோடு சமீபத்தில் விஜய் மற்றும் தில் ராஜு வாரிசு படத்தை பார்த்துள்ளனர். படம் என்னதான் நன்றாக இருந்தாலும் ரன் டைம் மிகவும் அதிகம் என கருதுகின்றார்களாம்.
அதாவது கிட்டத்தட்ட இப்படம் 2 மணிநேரம் 50 நிமிஷம் ஓடக்கூடிய படமாக இருக்கின்றதாம். எனவே சமீபகாலமாக படத்தின் ரன் டைம் படத்தின் வெற்றிக்கு பெரிய தடையாக இருந்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு விஜய் வாரிசு படத்தின் ரன் டைமை குறைக்க சொல்லியிருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது. எனவே வம்சி தற்போது தேவையில்லாத காட்சிகளை நீக்கிவிட்டு படத்தின் நீளத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!