• Nov 19 2024

விஜய்க்கு இப்படியான படம் நடிக்க ஆசையாம்… ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா சமீபகாலமாக ரசிகர்களிடையே பேராதரவு பெற்று வருகின்றது. அதற்கு காரணம் ஒவ்வொரு மொழிகளிலும் வெளியாகும் திரைப்படங்கள் உலக அளவில் வசூலில் அள்ளிக் குவித்து வருகின்றது. அந்த வகையில் வசூல் மழையில் நனையும் படங்களை கொடுப்பவர் தான் விஜய்.

இவ்வாறு இருக்கையில் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவர் ஒரு படத்திற்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். அதற்கு தருந்தாற்போல மாஸ் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தை இயக்கிய பாசில் அளித்திருக்கும் பேட்டியில் தற்போதைய மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் பற்றி கூறி இருக்கிறார்.

விஜய்க்கு சண்டை காட்சிகள், டான்ஸ் இல்லாத performance-oriented படங்களில் நடிக்க வேண்டுமென அதிக ஆசை இருக்கிறது, அதை என்னிடமே அவர் சொல்லி இருக்கிறார்

ஆனால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற பயம் இருப்பதாகவும் விஜய் தெரிவித்தாராம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement