• Nov 14 2024

ராஷ்மிகா செய்த விஷயத்தால் கையெடுத்து கும்பிட்ட விஜய்..அப்பிடி என்னதான் நடந்துச்சு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் நடிகர்  விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது, சமீபத்தில் கூட வாரிசு பொங்கலுக்கு கண்டிபாக வெளியாகுமென்றும் இன்னும் பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் மட்டும் எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் அவரை காண வந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டு சென்றார். அப்போது எடுக்கபட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.


அத்தோடு தற்போது வாரிசு படத்தின் கதாநாயகி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி விஜய் தான் தனது Crush என்றும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை எப்போது பார்த்தாலும் சுற்றிப்போடுவது போன்ற பழக்கத்தை தொடர்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.


இதனால் விஜய் அப்படி ராஷ்மிகா செய்தால் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என சென்று விடுவாராம். இதனை ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.  


Advertisement

Advertisement