• Nov 19 2024

மனோபாலாவின் மரணச் சடங்கிற்கு குங்குமத்தோடு வந்த விஜய்... ஒரு பெரிய மனுஷன் பண்ணுற வேலையா இது..? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டஒரு கலஞர் தான் நடிகர் மனோபலா(69). இவர் தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மனோபாலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நேற்றைய தினம் காலமானார்.


இதனையடுத்து பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கலினைத் தெரிவித்து இருந்தனர். இருந்தாலும் ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்றும் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து இருந்தனர். 


அந்தவகையில் நடிகர் விஜய்யும் மனோபாலாவின் வீட்டிற்கு நேரில் வந்து தன் இரங்கல்களை தெரிவித்து இருந்தார். அப்போது நடிகர் விஜய் நெற்றியில் குங்குமம் பொட்டு வைத்து இருந்தார்,


ஆனால் இது வரைக்கும் எந்த ஒரு நடிகர்களுமே இறுதி சடங்கிற்கு சென்றால் நெற்றியில் எந்த ஒரு பொட்டும் வைக்கவே மாட்டார்கள், அதே போல பெண்கள் அனைவரும் தலையில் பூ வைக்க மாட்டார்கள், ஆனால் இந்த விஷயத்தில் விஜய் ஏன் இப்படி செய்தார் என்று தான் தெரியாவில்லை. ஒரு வேளை விஜய்க்கு இதெல்லாம் தெரியாதா? என்று பலரும் கேள்வி கேட்டு திட்டித் தீர்த்து வருகின்றனர். 

Advertisement

Advertisement