• Nov 14 2024

தந்தையின் பிறந்தநாளுக்கு போகாத விஜய்- கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட அவரது அம்மா ஷோபனா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் முக்கிய நடிகர் தான் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது வாரிசு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தமனா கதாநாயகியாக நடிப்பதோடு பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் தளபதி விஜய் கடந்த ஜூன் 22ம் தேதி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து இருந்த வாரிசு திரைப்படத்திலிருந்து மூன்று பெஸ்ட் லுக் போஜ்டர் வெளியாகியிருந்தது. இவருக்கும் இவருடைய தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் இவர்களுக்கும் சில ஆண்டுகளாக மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளன

இந்த நிலையில், ஜூலை 2ம் தேதி அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 81வது பிறந்தநாளை இன்று கொண்டாடி உள்ளார். விஜய் ரசிகர்கள் பலரும் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது தனது மனைவி ஷோபா சந்திரசேகருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்திலும் 'வாரிசு' விஜய் இல்லை. தனது தந்தைக்கு வாழ்த்தாவது சொன்னாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடைசியாக நடிகர் விஜய் தனது பெற்றோர்களுடன் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய்யை ஒன்றாக இணைத்து ரசிகர்கள் எங்கேயும் காணவில்லை. கூடிய சீக்கிரமே அவர்கள் குடும்ப பிரச்சனை தீர்ந்து ஒன்றாக அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement