• Nov 19 2024

மாணவர்களை கௌரவித்த விஜய்... நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா... இதோ அவரே பகிர்ந்த பல தகவல்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் கடந்த ஜூன் 17 ஆம் தேதி தொகுதி வாரியாக 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  மாணவ, மாணவிகளுக்கு  சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்வு இரவு 11 மணி வரை நடந்தது. நடிகர் விஜய்யும் சற்றும் அசராமல் வந்திருந்த அனைவருக்கும் தன் கையாலேயே பொன்னாடை போர்த்தி சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர்.


இவ்வாறாக கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த நிகழ்வினை தொகுத்து வழங்கியவர் கற்பகம் என்ற பெண்மணி தான். இந்நிலையில் அந்நிகழ்வு குறித்தும் தன்னைப் பற்றியும் கற்பகம் பல விடயங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் "நான் முழு நேரமா எம்சி பண்ணிட்டு இருக்கேன். தவிர, நாங்க பாண்டிச்சேரியில் ஒரு யூடியூப் சேனலும் நடத்திட்டு வர்றோம். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கேன். விஜய் கல்வி விருதுகள் வழங்கும் விழாவிற்கு புஸ்ஸி ஆனந்த் சார் தான் என்னை பரிந்துரை பண்ணி வர சொன்னார். அவர் மூலமாகத்தான் அந்த நிகழ்வினைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது" என்றார்.

மேலும் "நம்ம எல்லோரும் ஆடியோ லான்ச்லதான் அவர் பேசுறதைப் பார்த்திருக்கோம். நானும் டிடி அக்கா, மிர்ச்சி விஜய் எல்லாம் தொகுத்து வழங்கிப் பார்த்திருக்கேன். ஆனா, நம்மளும் ஒரு நாள் அந்த இடத்துல நின்னு அவருக்கு ஹோஸ்ட் பண்ணுவோம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கல. இதே மாதிரி நாமளும் ஹோஸ்ட் பண்ணனுங்கிற ஆசை இருந்ததே தவிர நாம பண்ணிடுவோம்னுலாம் நான் நினைக்கவே இல்ல. 

நீங்க தான் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போறீங்கன்னு சொன்னதும் ரொம்ப ஆர்வமா இருந்தது. அதே மாதிரி ரொம்ப பொறுப்புணர்வும் இருந்தது. இந்த ஈவென்ட்டை நல்ல படியா பண்ணிடணும்னு நினைச்சேன். இந்த அளவுக்கு வேர்ல்டே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு இந்த நிகழ்ச்சி இருக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்ல" என்றார்.


தொடர்ந்து அவர் கூறுகையில் "ஈவென்ட்டிற்கு முன்னாடியும் நான் விஜய் சாரை மீட் பண்ணல. ஈவென்டுக்கு அப்புறமும் நான் மீட் பண்ணல. அன்னைக்கு எல்லாரும் பார்க்கும்போதுதான் நானும் பார்த்தேன். புஸ்ஸி ஆனந்த் சார், `நீங்க நல்லா பண்ணியிருந்தீங்கம்மான்னு!' வாழ்த்தினாங்க. ஆனா, தளபதி சாரை மீட் பண்ணுறதுக்கான வாய்ப்பு கிடைக்கல. புஸ்ஸி ஆனந்த் சார்கிட்ட கேட்டா கண்டிப்பா மீட் பண்ணக் கூட்டிட்டுப் போவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. 

சார் என்ன சொன்னாங்கன்னு எனக்குத் தெரியல. மேடையில் அவருடன் பேசுறதுக்கான வாய்ப்பு கிடைக்கல. ஒரு ரெண்டு, மூணு முறை ஐ கான்டேக்ட் மட்டும் இருந்தது. வந்ததும் ஒரு ஸ்மைல் பண்ணி வணக்கம் சொன்னார். நானும் திருப்பி சொன்னேன். குட்டி, குட்டி விஷயங்கள் தான் அங்க நடந்தது. அதுதவிர்த்து பேசுறதுக்கான சந்தர்ப்பமெல்லாம் கிடைக்கல" எனவும் கூறியுள்ளார்.


மேலும் "எனக்கு இது எப்பவுமே லைஃப்டைம் மொமண்ட் தான். எந்தவொரு ஈவென்ட்னாலும் இது நம்மளுடைய முதல் ஈவென்ட் இதை நல்லா பண்ணனுங்கிற எண்ணத்தோட தான் பண்ணுவேன். நானே என்னை கிள்ளிப் பார்த்துக்கிறேன் நாம தான் இந்த ஈவென்ட் பண்ணோமான்னுலாம்.. இது போதும் எனக்கு... வேற என்ன வேணும் அப்படிங்கிற மாதிரி சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு" எனவும் தெரிவித்துள்ளார் கற்பகம்.

Advertisement

Advertisement