இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படம் நாளைய தினம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இது ஒரு புறம் இருக்க விஜய் அவருடைய மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து முடிவை கையில் எடுத்துள்ளதாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வததிகள் பரவியது.
விஜய் தனக்கு நெருக்கமானவர்களின் விசேஷங்கள் மற்றும் படவிழாவிற்கு மனைவி சங்கீதாவுடன் வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், பிரியா அட்லி வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வாரிசு பட விழாவில் தனியாக கலந்து கொண்டதால் இந்த வதந்தி பரவியது.
மேலும் இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக விஜய் தரப்பில் இருந்து கூறப்பட்டதாவது, விஜய்யின் மனைவி சங்கீதா வெகேஷனுக்காக தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் அமெரிக்காவில் உள்ளதால் தான் அவர் படவிழா மற்றும் பிரியா அட்லீயின் விசேஷங்களில் கலந்து கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விஜய்யின் மனைவி சங்கீதா, நேற்று தளபதி விஜய் உடன் சேர்ந்து 'மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் திரையரங்கில் வாரிசு படத்தை பார்க்க சென்றுள்ளார். ஆனால் அங்கு படம் போட 2 மணிநேரங்கள் தாமதமாகியுள்ளது.
பின்னர் விஜய் மனைவியுடன் படம் பார்த்து விட்டு இரவு 8:30 மணி போல், அங்கிருந்து சென்றுள்ளார்.விஜய் படக்குழுவினர் சொன்ன நேரத்திற்கு மனைவியுடன் வந்த போதிலும், ஒரு சில காரணங்களால் படம் திரையிட இரண்டு மணிநேரம் தாமதமாகியதால் விஜய் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Listen News!