• Sep 20 2024

மீனாவின் தம்பி மீது வீண் பழி போட்ட விஜயா- முத்துவிடம் சிக்கிய மனோஜ்- மீனா எடுத்த முடிவு- Siragadikka Aasai Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நம்பர் 1 என்ற இடத்தைப் பிடித்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்பொழுது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அண்ணாமலை கொடுத்த 1 லட்சம் ரூபாய் பணத்தைக் காணவில்லை, அதை மீனாவின் தம்பி தான் எடுத்திருப்பான் என்று விஜயா மீனாவின் குடும்பத்தை வரவைக்கின்றார்.


அப்போது மீனா அவன் பணத்தை எடுத்ததை கண்டீங்களா என்று கேட்ட போது விஜயா அவன் வந்திட்டு போனதுக்கு பிறகு தான் பணம் காணாமல் போய்ச்சு நான் போலீஸ்ல கொடுக்கப்போகின்றேன் என்று கூறுகின்றார்.

அந்த நேரம் மனோஜிற்கு ஒரு கவர் வருகின்றது. அந்தக் கவரை வாங்கிப் பார்த்த முத்து மனோஜ் தான் பணத்தை எடுத்திருக்கின்றான் மனோஜ் பிடிபட்டுட்டான் என்று சொல்ல, மீனா இப்போ போலீஸ் ஸ்டேசன் போகலாமா அத்தை என்று கேட்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement