• Sep 20 2024

மீனாவை தொடர்ச்சியாக கொடுமை செய்யும் விஜயா.. மனோஜ்க்கு ஆப்பு வைக்க தயாரான ஸ்ருதி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், இறுதியாக மீனா கையில் கத்தியுடன் வந்து நிற்கஇ விஜயா அதிர்ச்சியடைகிறார். எனினும் இந்த ஆப்பிளையும் கொஞ்சம் கட் பண்ணி கொண்டு வா என பொறுமையாக சொல்லி அனுப்புகிறார். 

இதை தொடர்ந்து, ஸ்ருதி, ரோகிணி சாப்பிடுவதற்கு அமர்ந்து இருக்க, தனக்கு இட்லி வேணாம், ஸ்பெஷல் ஆம்லெட் போட்டுத் தாங்க மீனா என ஸ்ருதி கேட்க, விஜயாவும் 2  ஆம்லெட் போட்டுட்டு வா என சொல்லுகிறார்.

இது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்து ஆம்லெட் தானே நான் போறேன் என்று சொல்லி பிரிட்ஜில் இருந்து முட்டையை எடுத்து கீழே போட்டு உடைக்கிறார்.

இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய, இது என்ன ஹோட்டலா  ஆளாளுக்கு ஆர்டர் குடுத்துட்டு இருக்கீங்க உங்களுக்கு வேணும்னா நீங்க செஞ்சு சாப்பிடுங்க, இல்லை நீங்க செஞ்சு கொடுங்க என விஜயாவையும் திட்டிவிட்டு போக, எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று ஸ்ருதியும் ரோகிணியும் கிளம்பிச் சென்று விடுகின்றனர். 


அவர்கள் போன பின் மீனாவுக்கு திட்டிய விஜயா, இடத்தை க்கிளின் செய்து விட்டு, மார்க்கெட்டுக்கு போய்ட்டு வந்து,  எல்லாருக்கும் புடிச்ச மாதிரி சமையல் பண்ணி வை என லிஸ்ட் ஒன்று போட்டு அனுப்புகிறார்.

மார்க்கெட்டுக்கு போகும் வழியில் அவருடைய அம்மாவை பார்த்து கதைக்க, வீட்டுக்கு கூட்டிட்டு போய் கழுத்தில் இருந்த செயின் எங்கே என்று கேட்க நடந்த விஷயங்களை சொல்கிறார் மீனா.

வீட்டுக்கு வந்த மீனாவிடம், மார்க்கெட்டுக்கு போய் வர இவ்வளவு நேரமா என திட்டிவிட்டு, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னா சமைக்கணும் என சொல்ல மீனாவும் சமைத்து முடிக்கிறார். 

இவ்வாறு ஒரு வழியாக அனைத்தையும் சமைத்து முடித்து வெளியே வந்த மீனாவின் முகத்தில் அழுக்குத் துணிகளை தூக்கிப்போட்டு இதெல்லாம் துவை என கொடுமைப்படுத்துகிறார் விஜயா. 

இதையடுத்து, ரவி சுருதியை ட்ராப் செய்ய வர, இருவரும் பேசி ஒரு கார் வாங்கிடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.அதன்படி,  நாளைக்கு மனோஜ் வேலை செய்யும் ஷோ ரூமுக்கு போய் கார் புக் பண்ணிடலாம் என்று சொல்ல, இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. 

Advertisement

Advertisement