• Nov 11 2024

விஜயகாந்த் அண்ணன் அடிமட்ட எளிமையானவர்- புகழாரம் சூட்டிய பிரபல நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முக்கிய நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் உணவு விஷயத்தில் அனைவரையும் சமமாக நடத்தக் கூடியவர், தன்னை சார்ந்து இருக்கும் யாரேனும் தப்பு செய்துவிட்டால், அவர்களை உரிமையோடு அடித்து கண்டிக்கவும் செய்வாராம்.

இவருடைய நல்ல குணங்களைப் பற்றி பிரபலங்கள் பலரும் கூறி வருவது வழமையான விடயம் தான். அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகையான வடிவுக்கரசி விஜயகாந்த் பற்றி கூறியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'அன்னை என் தெய்வம்' என்கிற படத்தை நடிகை வடிவுக்கரசிதான் தயாரித்தார். அதில் கதாநாயகியாக நடிக்க, தன்னுடைய நெருங்கிய தோழியான ராதிகாவை அனுகியுள்ளார் வடிவுக்கரசி. ஆனால் அந்தக் கருப்பனுடன் யார் நடிப்பார், உனக்கு வேறு கதாநாயகனே கிடைக்கவில்லையா என்று அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் ராதிகா.

அதே போல் அம்மா வேடத்தில் நடிக்க நடிகை லக்ஷ்மியை அனுகியபோது, என்னை விட வயதில் மூத்தவர் அவர். அவருக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.அன்னை என் தெய்வம் திரைப்படத்தில் இறுதியாக நடிகை மாதுரிதான் கதாநாயகியாகவும், KR விஜயா அவர்கள் அம்மாவாகவும் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிறருடன் பந்தயம் கட்டி சீட்டுக்கட்டி விளையாடுவாராம் விஜயகாந்த். ஆனால் ஏற்கனவே தான் மறைத்து வைத்திருக்கும் 13 கார்டுகளை வைத்து சீட்டாட்டத்தில் ஏமாற்றி ஜெயித்து விடுவார் என்று கூறியுள்ளார்.

அப்படி ஏமாற்றி ஜெய்க்கும் பணத்தில் அனைவருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுப்பாராம். அவருக்கு கொடுக்கும் பழக்கம் மட்டுமே இருக்கிறது. அரசியலுக்கு வரும் முன்னரே பல உதவிகளை செய்துள்ள வள்ளல் அவர். அவரை போல் யாராலும் உதவி செய்ய முடியாது. நடிகர் ரஜினிகாந்த் எளிமையானவர் என்றால், விஜயகாந்த் அண்ணன் அடிமட்ட எளிமையானவர் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை வடிவுக்கரசி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement